ஜனாதிபதியின் இன்றைய சாய்ந்தமருது விஜயத்தில் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா..

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று புதன்கிழமை சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுணர் கௌரவ. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலகம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல், சாய்ந்தமருது மக்கள் பணிமனை மற்றும் சிவில் அமைப்புகளின் அனுசரனையுடன் 1000 இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் காலை 11.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதில் சாய்ந்தமருது மக்கள் அரசிற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி அவர்கள் தமது நன்றிகளை தெரிவிற்கும் பொருட்டு சாய்ந்தமருது மண்ணுக்கு நேரடியாக விஜயம் செய்வதாக பேசப்படுகின்றது.

Post a Comment

0 Comments