(ANM.SAJATH)
இன்றைய சிறுவர்கள் இன்றையே தலைவர்கள்" எனும் தொனிப்பொருளில் நாவிதன்வெளி ஊடக வலையமைப்பின் (NTv) ஏற்பாட்டில் மற்றும் அணுசரனையில் Junior Champions league - 2019 கிரிக்கெட் சுற்றுப்போட்டி 05/05/2019 ம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் 05ம் கிராம அமீர் அலி பொது மைதானத்தில் போட்டிகள் ஆரம்பமாகியது இதில் இரு பலம் பொருந்திய அணிகள் மோதியது ஒரு அணிக்கு 08 வீரர்களும் 05 ஓவர்களாகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு அமைய முதலில் நாணய சுழச்சியில் வெற்றிபெற்று Junior Superstars அணியின் தலைவர் J.M.ஜகி துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர் Junior Champion அணியினர் களத்தடுப்பாட கலமிரங்கினர் முதல் ஓவர் அணித்தலைவர் NM.சனூஸ் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்திருந்தார் Junior Superstars அணியினர் 05 ஓவர்கள் முடிவில் மொத்தமாக 48 ஓட்டங்களை பெற்றனர் 04 விக்கெட்களை இழந்து அணித்தலைவர் ஜகி 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிளந்தார்
30 பந்துகளுக்கு 49 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நோக்கோடு Junior Champion தலைவர் சனூஸ் கலமிரங்கி 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிளந்தார் அதை அடுத்துவந்த வீரர்களும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 01 விக்கெட்டை மாத்திரம் இழந்து NTv இன் Junior champions league கிண்ணத்தை Junior Champion அணியினர்களே தட்டிச்சென்றனர்.
இப்போட்டிக்கு பிரதான நடுவராக பிரண்ஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ANM.சஜாத் உம் துணை நடுவராக NTv இன் தவிசாளர் ULM.நதீர் அவர்களும் நடுமைத்துவம் வழங்கினர்கள்.
இப்போட்டிகள் அனைத்தும் எமது NTv இன் முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது நீங்கள் பார்வையிடலாம் NTv Network Navithanveli எனும் முகநூல் பக்கத்தை Follow செய்வதன் மூலமாக
இதனை நாங்கள் NTv இனால் நடாத்தியமைக்கான காரணம் சிறுவர்களை தவறான வழிகளில் செல்லவிடாமல் அனைவரும் ஒற்றுமையையாகவும் தலைமைத்துவ ஆளுமையும் வளர்த்துக்கொள்ளுவதற்கும் ஆகும்



0 Comments