.
KM. சப்றாஸ் மற்றும் நேதா அன்ஸார் அவர்களின் பிரதான அனுசரனையில் NTv முகநூல் தொலைக்காட்சி நடாத்திய NTv Champions League போட்டியின் இறுதிப் போட்டி 2019.05.06 ஆம் திகதி அதாவது மிகக் கோலகலமாக இடம்பெற்று முடிந்தது
இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வெளி வேப்பையடி உதயா விளையாட்டு கழகம் மற்றும் சாய்ந்தமருது ஹொலி ஹீரோ கழகமும் போட்டியில் கலந்து கொண்டனர். நாணைய சுழற்சியில் வெற்றியீட்டிய சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்து 6 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.. இதில் அணித் தலைவர் முஸ்பிக் 20 பந்து வீச்சுக்களுக்கு 49 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.. 87 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய நாவிதன்வெளி வேப்பையடி உதயா விளையாட்டு கழகம் 6 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டனர்...
இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் அணியின் தலைவர் முஸ்பிக் மற்றும் தொடர் ஆட்ட நாயகன் விருதை உதயா விளையாட்டு கழகத்தின் முன்னால் தலைவர் காந்தன் பெற்றுக் கொண்டனர்....
இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு கிண்ணம் பணப்பரிசு மற்றும் பதக்கம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது...அதை போன்று NTv முகநூல் தொலைக்காட்சியின் தலைவர் ULM. நதீர், இணைத்தலைவர்கள் ANM. சஜாத், AGM. சல்பிர், SM. றிசான் ஆகியோர் NTv முகநூல் தொலைக்காட்சின் முகாமையாளர் UL. தமீன் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்
இப்போட்டிக்கு இணை அனுசரனையாளர்களாக நாவிதன்வெளி வீரத்திடல் லாபிர், டுபாய் ரஜாய் மற்றும் இஷாக் அவர்களு கலந்து கொண்டனர்









0 Comments