சவளக்கடை பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட 05 பசுமாடுகளையும் அதனை கொண்டு வந்த ஒருவரும் நேற்று காலை கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சவளக்கடை பிரதேசத்தில் வைத்து O5 பசு மாடுகளையும், அதனுடன் தொடர்புடைய சவளக்கடையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட மாடுகளையும், சந்தேக நபரையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments