சவளக்கடை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 24 பசுமாடுகளையும் இருநபர் கைது
-Thursday, July 18, 2019
(நமது நிருபர்) சவளக்கடை பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக சித்திரவதைபடுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட 24 பசுமாடுகளையும் அதனை கொண்டு வந்த இருநபர்களையும் நேற்று இரவு (17) கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் சித்திரவதைபடுத்தும் வகையில் கொண்டு வரப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் தலைமையிலான குழுவினர் சவளக்கடை பிரதேசத்தில் வைத்து 24 பசு மாடுகளையும், அதனுடன் தொடர்புடைய சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இருநபர்களும், கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட மாடுகளையும், சந்தேக நபர்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments