நாவிதன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பு (படங்கள்)

(நமது நிருபர்)
நாவிதன்வெளி பிரதேசத்தின்  பழம் பெரும் ஆலங்களில் ஒன்றான  நாவிதன்வெளி  அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி உற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு வைபவம் இன்று (16) சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான வருடாந்த சக்தி உற்சவத்தில் 09 நாட்கள்  நாவநாள் கிரியைகள் இடம்பெற்று இறுதி நாளான  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ மிதிப்பு, அம்மன் குளித்திப் பாடல், அம்மன் மங்கள வாத்துப்பாடல், கும்பம் சொரிதலுடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெற்றது.

நாவிதன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ தர்ம சுதந்திரன் குருக்கள்  தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பெரும்திரளான பக்த அடியார்கள் தீ மிதிப்பில் ஈடுபட்டு தங்களது நேத்திக் கடன்களை நிறைவு செய்தனர்.
















Post a Comment

0 Comments