நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலைமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் காணப்படும் கால்நடைகள் உயிரிழக்கும் நிலைமை காணப்பட்டு வருகின்றது.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளி பகுதியில் உள்ள மானா குளம் புனரமைப்பு இல்லாமல் குளத்தில் நீர் வற்றிய நிலையில் காணப்படுதால் கால்நடைகள் குடிப்பதற்கு நீர் இல்லாமல் உயிரிழக்கும் நிலைமை காணப்பட்டு வருகின்றது.
கதிரவெளி பகுதியில் கால் நடைகளை நம்பி வாழும் பண்ணையாளர் தங்களுடைய கால் நடைகளுக்கு குடிக்க நீர் இன்மையால் உயிரிழப்பதால் பெரிதும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
கதிரவெளி பகுதியிலுள்ள மானா குளம் புனரமைப்பு செய்யப்படும் பட்சத்தில் கால்நடைகளில் குடி நீர் பிரச்சனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய நிலை காணப்படும் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கதிரவெளி பகுதியில் உயிரிழந்த கால் நடையினை பிரதேசத்தின் சிலர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
0 Comments