சவளக்கடை பிரதேச சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்

 (எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை பிரதேச சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்   அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீ.ஜி.டீ.ஏ.கருணாரட்ன  தலைமையில் பொலிஸ் நிலைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது 

இதன்போது பிரதேசத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்கள், சுற்றாடல் பாதுகாப்பு, கட்டாக்காலி மாடுகளின் நடமாற்றம், பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல் போன்றன தொடர்பாக ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  றம்சீன் பக்கீர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர்; எச்.எம்.ஏ.பீ.ஹேரத், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் ஏ.அப்துல் றகீம், நாவிதன்வெளி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

















Post a Comment

0 Comments