(ஏ.எஸ்.எம்.முஜாஹித்)
ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சேனைக்குடியிருப்பு கமநல சேவைவிவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் பண்ணைப் பெண்களுக்கு மரக்கறி பதனிடலும், பெறுமதி சேர்த்தலும்எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நற்பிட்டிமுனையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பண்ணைப் பெண்கள்விவசாய விரிவாக்கல் பாடவிதான உத்தியோகத்தர் டபிள்யூ.றூபினி பிரசாங்கிகா கலந்து கொண்டுஇரசாயனத்திலிருந்து விடுவித்து சேதன விவசாயத்தினை மேற்கொள்வது மற்றும் தொற்றா நோய்களிலிருந்துபாதுகாப்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
சேனைக்குடியிருப்பு விவசாயப் போதனாசிரியர் எம்.பி.நஜிமுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்தொழில்நுட்ப உதவியாளர் என்.மஹீஸா பானு, சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.பி.எம்.இர்ஷாத், விவசாயத் திணைக்களத்தின் தலைமைப்பீட விவசாய போதனாசிரியர் எஸ்.பரமேஸ்வரன், வலய தலைமைப்பீடவிவசாய போதனாசிரியர் எஸ்.எல்.எம்.றஹீம், வலய பாவிதான உத்தியோகத்தர் பி.குணநீதராஜா உட்பட மேலும் பலர்கலந்து கொண்டனர்.
இதன்போது மரக்கறி பதனிடலும், பெறுமதி சேர்த்தலும் தொடர்பாக பண்ணைப் பெண்களுக்கு செய்முறை பயிற்சிகளும்வழங்கப்பட்டன. இதன் மூலமாக அவர்களது நாளாந்த தலா வருமானத்தை அதிகதித்துக் கொள்ளக்கூடியதாகவும், அனைத்து காங்களிலும் உணவை உட்கொள்ளக்கூடிய வகையில் சேமித்து வைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
இதேவேளை மாணவர்களுக்கு பாடசாலை பருவத்திலிருந்தே வீட்டில் தயாரிக்கப்படும் நஞ்சுத்தன்மையற்றஉணவுகளை வழங்குவதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினரை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது.



0 Comments