இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸாஜீத் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் சர்வதேச விருதுக்கு தெரிவு....


அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஜீனியஸ்7 விருதுப் பிரிவின் (Genius7 Award Unit) தலைவருமான இஷட்.எம் ஸாஜீத் அவர்களின் தனியான முயற்சியிலும் அவரின் தலமையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சும்மார் 58 மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் பிரித்தானிய ‘எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழா’-2019 விருதுக்கு (The Duke of Edinburgh’s International Award) வெங்கலம் மற்றும் வெள்ளி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான விருது வழங்கும் விழா, கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எரந்திக வெலியந்த தலைமையில் அமைச்சர்கள்,பிரித்தானிய எடின்பரோ குழுவினரின் மற்றும் வெளிநாட்டு தூதரவளர்களின் பங்கேற்புடன் இம்மாதம் ஜூலை மாதம் 31 திகதி  அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இவ்விருதானது 14-24 வயது உட்பட்ட  இளைஞர் யுவதிகளின் ஆளுமை,நுண்ணறிவு, வெளிக்கள ஆய்வு, தலைமைத்துவம், ஆற்றல், கல்வி, திறமை, விளையாட்டு ,சர்வதேச தொடர்புகளுடைய இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்ற ஓர் சர்வதேச விருதாகும்.

இவ் விருதினை பெற்றுக் கொள்ளவுள்ள இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்கிய
அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஜீனியஸ்7 விருதுப் பிரிவின் (Genius7 Award Unit) தலைவருமான இஷட்.எம் ஸாஜீத் மேலும் சர்வதேச ரீதியில் பல சாதனைகள் பெற்றவருமாவார்.

இவர் தனது ஆரம்ப கல்வியினை சாய்ந்தமருது G.M.M.S பாடசாலையிலும் உயர் கல்வியினை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்ற இவர் சர்வதேச பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவ பட்டத்தாரியுமான இவர் இலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரியுமாவார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாகவும் இலங்கையில் இரண்டாவதாகவும் 74 மேற்பட்ட இளைஞர் யுவதிகள் ஜீனியஸ்7 விருதுப் பிரிவினால் குறித்த விருதினை பெற்றுக்கெள்ளுவது முதல் தடவையாகும்.

Post a Comment

0 Comments