(எம்.சீ.எம்.சம்சுல் முனா)
பல இளைஞர்களும் புத்திஜீவிகளும் கல்விமான்களும் விளையாட்டுத்துறை மேலதிகாரிகளும் சேரிந்து வாழும் எமது சாய்ந்தமருது கிராமத்தில் சர்வதேச விளையாட்டு என கருதப்படும் பூப்பந்து விளையாட்டிற்கான ஒரு அமைவிடம் இல்லாமல் பாரிய சவாலை இன்றைய இளைஞர்கள் முதல் பெரியோர் வரை எதிர்கொள்கின்றனர்.
சாய்ந்தமருது முன்னால் பிரதேச செயலாளராக இருந்த பிரதேச செயலாளர் சலீம் சேர் அதற்கான இடத்தை ஒதுக்கித் தந்தும் இதற்கான முயற்சிகளை எடுத்து செய்யாமல் இருப்பதன் மாயம் என்ன???தாங்கள் அனைவரும் சிந்திக்கே வேண்டும் உண்மையில் ஒவ்வொரு ஊரிலும் இந்த Badmintion court காணப்படுகின்றது. ஆனால் எமது ஊரில் மாத்திரம் இல்லை அண்மையில் கூட எமது பிரதேசத்தைச்சேர்ந்த விளையாட்டு ஆசிரியர் அலியார் பைசர் அவர்கள் இலங்கை பூப்பந்து சம்மேளனேத்திற்கு செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இருந்தும் அவரது சொந்த பிறந்த மண்ணில் ஒரு பூப்பந்து தளம் இல்லை கவலையான விடயம். தயவு செய்து இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பூப்பந்து தளத்தை சாய்ந்தமருதில் அமைத்து எமது இளைஞர் முதல் பெரியோர் வரையான தாகத்தை நிவர்த்தி செய்து தரவேண்டும் இது உரியவர்களின் கவனத்திற்கு இங்கு உள்ளவர்கள் சம்மாந்துறைக்கு செல்லவேண்டியுள்ளது விளையாடுவதற்கு இல்லை என்றால் கல்முனை மற்றும் நிந்தவூர் செல்லவேண்டியுள்ளது ஆனால் சில இடங்களில் அவ்வூர் இளைஞர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.ஆகவே தயவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நல்ல தீர்வினை எமக்கு வழங்கி தரவேண்டும் அதற்கான முழு எங்களாலான சகல உதவிகளையும் தர காத்துக்கொண்டிருக்கிறோம்.என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

0 Comments