மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் -வளிமண்டலவியல் திணைக்களம்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேசங்களிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
அதிக வெப்பம் நிலவும் சந்தர்ப்பங்களில் அதிகமாக நீரை அருந்துமாறும் நிழலான இடங்களில் இளைப்பாறுதல், வௌிர்நிற ஆடைகளை அணிய வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Post a Comment

0 Comments