மாவடிச்சேனையில் முதியோர்களுக்கான மருத்துவ முகாம்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் முதியோர்களுக்கான மருத்துவ முகாம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் தலைமையில் மாவடிச்சேனை மாற்றுத்திறனாளகளின் காரியாலயத்தில் மருத்துவ முகாம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எம்.பி.எம்.முஹைதீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.பி.எம்.பைசல், என்.கனலோஜினி மற்றும் சமூக சேவைப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இரத்த அளுத்த பரிசோதனை, நீரிழிவு பரிசோதனைகள் உட்பட பல பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், முதியோர்களுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டது.

மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆயுள்வேத இலைக்கஞ்சி வழங்கி வைக்கப்பட்டதுடன், இளம் மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலியும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.




Post a Comment

0 Comments