12ஆம் கொளனி அஸ்-ஸிராஜ் அஹதிய்யாப் பாடசாலையினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

(எம்.எம்.ஜபீர்)
மத்தியமுகாம் 12ஆம் கொளனி அஸ்-ஸிராஜ் அஹதிய்யாப் பாடசாலையினால் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நிதிப் பங்களிப்புடன் வருமானத்தினை இழந்த 30 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை தடுக்கும் நோக்கில் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் சாளம்பைக்கேணி-03 கிராமத்தில் வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு 1000 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

அஸ்-ஸிராஜ் அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர் ஏ.ஜே.எம்.ஹில்வான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.எம்.அஷாத், அஹதிய்யாப் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கிஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.




Post a Comment

0 Comments